டாட்டூ போடுற இடமா அது
ADDED : 1467 days ago
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் ஆண்ட்ரியா. இவர் நடித்துள்ள அரண்மனை 3 படம் அக்., 14ல் ரிலீஸாக உள்ளது. அதோடு மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு 2 படத்தில் நடித்துள்ளார் ஆண்ட்ரியா. இன்ஸ்டாகிராம், டுவிட்டர் உள்ளிட்ட சமூகவலைதளத்திலும் துடிப்பான செயல்பாட்டாளராக ஆண்ட்ரியா இருந்து வருகிறார். சமீபத்தில் இவர் பதிவிட்ட ஒரு படம் சர்ச்சையான பேசு பொருளாகியுள்ளது. இடுப்புக்கு கீழே பட்டாம்பூச்சி டாட்டூவை குத்தியுள்ள படத்தை வெளியிட, அதை பார்த்தவர்கள், ‛டாட்டூ போடுற இடமா அது? இல்லை பிசாசு 2 படத்திற்கு பிரமோசனா?' என கேள்வி எழுப்பிவருகின்றனர்.