மகனின் 3வது பிறந்தநாளைக் கொண்டாடிய ரம்பா
ADDED : 1466 days ago
தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகயைக இருந்தவர் ரம்பா. ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், விஜய் என பல முன்னணி நடிகர்களின் பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். 2010ம் ஆண்டு கனாடவைச் சேர்ந்த தொழிலதிபரான இலங்கைத் தமிழர் இந்திரகுமார் பத்மநாதன் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன் இருக்கிறார்கள்.
தனது மகனின் 3வது பிறந்தநாளை ரம்பா குடும்பத்தினருடன் கொண்டாடியுள்ளார். அந்தப் புகைப்படங்களை தனது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். திருமணத்திற்குப் பிறகு சினிமாவில் நடிக்கவில்லை என்றாலும் சென்னை வரும் போதெல்லாம் சில மாதங்கள் தங்கியிருந்து டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை ரம்பா வழக்கமாக வைத்துள்ளார்.