நாளை ஜீ தமிழ் டிவியில் வெளியாகும் ‛என்றாவது ஒரு நாள்' படம்
ADDED : 1465 days ago
அறிமுக இயக்குநர் வெற்றி துரைசாமி இயக்கத்தில் விதார்த், ரம்யா நம்பீசன் நடிப்பில் உருவாகி உள்ள படம் என்றாவது ஒரு நாள். கால்நடை வளர்ப்பு, உலகமயமாக்கல் கொண்டு வந்த இடப்பெயர்வு கதைக்களத்தில் படம் உருவாகியுள்ளது. படத்தில் தண்ணீர் பஞ்சம், குழந்தைத் தொழிலாளர்கள் ஆகியவற்றையும் இயக்குனர் கையாண்டுள்ளார். இந்தப் படம் சென்னை திரைப்பட விழாவில் சிறந்த படத்திற்கான விருது வென்றது. என்.ஆர்.ரகுநந்தன் இசையமைத்துள்ளார். இப்படம் தியேட்டர் வெளியீட்டை தவிர்த்து நேரடியாக டிவியில் வெளியாகிறது. நாளை(அக்., 3) ஜீ தமிழ் டிவியில் மாலை 5மணிக்கு இந்தபடம் வெளியாகிறது.
கொரோனா இன்னும் முழுமையாக தீராத சூழலில் மக்கள் தியேட்டர்களுக்கு செல்ல தயங்கி வரும் சூழலில் இது மாதிரியான நல்ல படங்கள் டிவியில் வெளியாவது நேரடியாக மக்களை சென்று சேர இது ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது.