மயில்சாமி பிறந்தநாளை பிரியாணியுடன் கொண்டாடிய உதயநிதி
ADDED : 1462 days ago
ஆர்ட்டிகள் 15 படத்தின் தமிழ் பதிப்பாக உருவாகும் படத்தில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடிக்கின்றார். கதாநாயகியாக நடிகை தான்யா ரவிச்சந்திரன் நடிக்கின்றார். தற்போது பொள்ளாச்சியில் நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்ட நடிகர் மயில்சாமி தனது பிறந்தநாளை இயக்குனர் அருண்ராஜா காமராஜ், நடிகர்கள் உதயநிதி ஸ்டாலின், தான்யா ரவிச்சந்திரன் உள்ளிட்ட படக்குழுவினருடன் இணைந்து மகிழ்ச்சியுடன் கேக் வெட்டி கொண்டாடினார்.
அனைவரும் தங்களது வாழ்த்துக்களை மயில்சாமிக்கு தெரிவித்தனர். மயில்சாமி தனது பிறந்த நாளை முன்னிட்டு 300 குழந்தைகளுக்கு ஐஸ்கிரீம் வழங்கினார். மேலும் உதயநிதி ஸ்டாலின், மயில்சாமியின் பிறந்த நாளை சிறப்பிக்கும் வகையில் படக்குழுவினர் அனைவருக்கும் பிரியாணி வழங்கினார். மயில்சாமி கேக் வெட்டி கொண்டாடும் முதல் பிறந்தநாள் இது என்பது குறிப்பிடத்தக்கது.