மூதாட்டியை வைத்து படம் இயக்கும் பிரபு சாலமன்
ADDED : 1508 days ago
உலக முதியோர் தினத்தை முன்னிட்டு திருச்சியில் உள்ள ஒரு தொண்டு நிறுவனத்தின் சார்பில் முதியோர்களுக்கென பிரத்யேகமான யூ-டியூப் சேனல் தொடக்க விழா நடைபெற்றது. திரைப்பட இயக்குநர் பிரபு சாலமன் சேனலைத் தொடங்கி வைத்தார். இதன் பின்னர் பிரபு சாலமன் பேசுகையில், எனது அடுத்த படத்தின் முக்கிய கதாபாத்திரம் ஒரு மூதாட்டி. இதற்காக பல்வேறு பகுதிகளிலும் தீவிரமாக தேடினோம். அந்த தேடலையே ஒரு படமாக்கும் வகையில் சுவாரஸ்யமாக இருக்கிறது.
குறிப்பாக, நிறைய முதியவர்களை சந்திக்கவும் அவர்களிடம் உரையாடினேன். அவர்களிடமிருந்து நிறைய அனுபவங்களைப் பெற்றுக் கொண்டோம். அவர்கள் குழந்தைகளைப் போன்றவர்கள். முதியவர்களிடம் பொய், புரட்டு. வஞ்சம், வன்மம் எதுவும் இல்லை. முதியவர்களிடம் சொல்லப்படாத கதைகள் புதைந்து கிடக்கின்றன. நிறைய அனுபவங்கள் கொட்டிக் கிடக்கின்றன. அவர்கள் ஒரு நூலகம். அவர்களின் கைகளை நாம் பற்றிக் கொள்ள வேண்டும், என்றார்.