சுந்தர்.சி இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்
ADDED : 1507 days ago
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த ஜகமே தந்திரம் படம் வெளியான நிலையில் அடுத்தபடியாக பாலிவுட்டில் நடித்துள்ள அத்ராங்கி ரே, ஹாலிவுட்டில் நடித்துள்ள தி கிரேமேன் போன்ற படங்கள் ரிலீசாக உள்ளன.
இந்தநிலையில் தற்போது மாறன், திருச்சிற்றம்பலம் படங்களில் நடித்து வரும் தனுஷ் அதையடுத்து சேகர்கம்முலா இயக்கும் படத்தில் நடிக்கப்போகிறார். அதோடு தனது அண்ணன் செல்வராகவன் இயக்கும் நானே வருவேன் படத்திலும் நடிப்பார் என்று தெரிகிறது.
இந்தநிலையில் அரண்மனை-3 படத்தை அடுத்து சுந்தர்.சி இயக்கும் புதிய படத்தில் தனுஷ் நடிக்கயிருப்பதாக தற்போது இன்னொரு தகவல் வெளியாகியுள்ளது. அரண்மனை-3 வெளியானதும் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்கிற தகவல்களும் வெளியாகியுள்ளன.