தரையில் இருந்து மெத்தைக்கு தாவும் வீடியோவை வெளியிட்ட அஞ்சலி
ADDED : 1459 days ago
சைலன்ஸ் படத்தை அடுத்து ராம்சரணை வைத்து ஷங்கர் இயக்கும் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் அஞ்சலி. அதோடு தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்து வரும் அவர், தனது செல்ல நாய்குட்டியுடன் கொஞ்சி விளையாடும் போட்டோ வீடியோக்களை அவ்வப்போது வெளியிட்டு வருபவர் சமீபத்தில் ஒரு துணியில் தான் தலைகீழாக தொங்கியபடி யோகாசனம் செய்யும் போட்டோக்களை வெளியிட்டிருந்தார்.
அதையடுத்து தற்போது தனது வீட்டிற்குள் தரையில் நின்றபடி மெத்தைக்கு ஜம்ப் பண்ணும் ஒரு வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ 6 மணி நேரத்தில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லைக்குகளை பெற்றுள்ளது.