‛ரவுடி பேபி' ஆன ஹன்சிகா
ADDED : 1487 days ago
தற்போது சிம்புவுடன் மஹா மற்றும் பார்ட்னர் ஆகிய படங்களில் நடித்துள்ள ஹன்சிகா, தெலுங்கிலும் இரண்டு படங்களில் நடித்து முடித்துள்ளார். இந்நிலையில் மஹா படத்தை அடுத்து ராஜூ சரவணன் என்பவர் இயக்கும் படத்தில் மீண்டும் கதையின் நாயகியாக நடிக்கிறார் ஹன்சிகா. இப்படத்திற்கு தனுஷ் நடித்த மாரி-2 படத்தில் இடம்பெற்ற ரவுடிபேபி என்ற பாடல் வரியை தலைப்பாக வைக்கப்பட்டுள்ளது. மேலும், சாம்.சிஎஸ் இசையமைக்கிறார் இன்று முதல் இந்த படத்தின்படப்பிடிப்பு துவங்கியது.