விஜய்சேதுபதி மகள் நடித்த முகிழ்
ADDED : 1564 days ago
விஜய் சேதுபதியின் மகன் சில படங்களில் நடித்துள்ளர். தற்போது அவரின் மகள் ஸ்ரீஜாவும் நடிப்பு பக்கம் வந்திருக்கிறார். அவர் நடித்திருக்கும் படம் முகிழ். இதனை விஜய் சேதுபதியே தயாரித்து, நடிக்கவும் செய்திருக்கிறார். இவர்களுடன் ரெஜினா முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். கார்த்திக் சுவாமிநாதன் என்பவர் இயக்கியுள்ளார். ரேவா இசையில் சத்திய பொன்மார் ஒளிப்பதிவில் படம் உருவாகி உள்ளது. நாளை இந்த படம் திரையரங்குகளில் வெளியாகிறது. ஒரு நாய்குட்டிக்கும், ஒரு சிறுமிக்குமான பாசப் போராட்டத்தை சொல்லும் படம்.