உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஒலிம்பிக் சங்கத் தலைவர் ஆனார் ஐசரி கணேஷ்

ஒலிம்பிக் சங்கத் தலைவர் ஆனார் ஐசரி கணேஷ்

பிரபல படத் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ். தேவி, போகன், ஜூங்கா, எல்.கே.ஜி, கோமாளி, பப்பி, சீறு, மூக்குத்தி அம்மன் உள்பட பல படங்களை தயாரித்துள்ளார். 2.0, டபுள்ஸ், துள்ளுவதோ இளமை, லட்சுமி உள்பட பல படங்களில் நடித்தும் உள்ளார். பல கல்வி நிறுவனங்களையும் நடத்தி வருகிறார். ஐசரி கணேஷ் 15 ஆண்டுகளாக இந்திய ஒலிம்பிக் சங்கத் துணை தலைவராக இருந்து வந்தார். தற்போது அதன் தலைவராகி உள்ளார்.


தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளுக்கான தேர்தல் நடைபெற்றது. 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இத்தேர்தலில், இந்த முறை இச்சங்கத்தின் தலைவராக ஐசரி கே.கணேஷ் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். தமிழ்பட தயாரிப்பாளரான கல்பாத்தி அகோரம் கிரிக்கெட் சங்க துணை தலைவராக இருப்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !