"நாய் சேகர் ரிட்டன்ஸ்" - வடிவேலு பட தலைப்பு அறிவிப்பு
ADDED : 1458 days ago
சிறிய இடைவெளிக்கு பின் மீண்டும் சினிமாவில் நடிக்க உள்ளார் வடிவேலு. இவரின் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. சுராஜ் இயக்குகிறார். இப்படத்திற்கு நாய் சேகர் என பெயர் வைக்க முடிவு செய்தனர். ஆனால் அந்த பெயரில் சதீஷ் நடிக்க, ஒரு படம் தயாராகி வருகிறது. இந்நிலையில் வடிவேலு படத்திற்கு நாய் சேகர் ரிட்டன்ஸ் என பெயரிட்டு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் இன்று வெளியிட்டுள்ளனர். நாய்கள் புடைசூழ வடிவேலு ஒய்யாரமாக ஸ்டைலாக அமர்ந்துள்ள போஸ்டரை வெளியிட்டுள்ளனர். மற்ற நடிகர்கள் தேர்வு நடக்கிறது. சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளனர். டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.