உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஆணுக்கும் பெண்ணுக்கும் தனித்தனி நீதியா ? ; சமந்தா கேள்வி

ஆணுக்கும் பெண்ணுக்கும் தனித்தனி நீதியா ? ; சமந்தா கேள்வி

காதல் கணவரும், நடிகருமான நாகசைதன்யாவுடன் தனது திருமணம் முறிவை சில நாட்களுக்கு முன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் சமந்தா. அதற்கு பல்வேறு விதமான கருத்துக்கள் விமர்சனங்கள் சோஷியல் மீடியாவில் வெளியாகி வருகின்றன. குறிப்பாக சமந்தா பக்கமே தவறு இருப்பது போல பலரும் குற்றம் சாட்டி பதிவுகளை இட்டு வருகின்றனர். சமீப நாட்களாக சோஷியல் மீடியாவில் மீண்டும் ஆக்டிவாக செயல்பட துவங்கியுள்ள சமந்தா, இந்த விமர்சனங்கள் குறித்து ஒரு பரிதா என்கிற எழுத்தாளர் ஒருவரின் கருத்தை தனது பதிலாக பதிவிட்டுள்ளார்.

அதில், 'பெண்கள் செய்கின்ற விஷயமெல்லாம் இங்கே ஒழுக்கத்துக்கு உட்பட்டு கேள்வி கேட்கப்படும் என்பது மாறாத விஷயம் என்றால், ஆண்கள் செய்வது மட்டும் ஒழுக்கத்துக்கு உட்பட்டு கேள்வி கேட்கப்படுவதில்லையே ஏன்.? அப்படியானால் நமது சமூகத்தில் அடிப்படையிலேயே ஒழுக்கம் இல்லை” என கூறப்பட்டுள்ளது. பொதுவாக திருமண முறிவு என வரும்போது, அதிலும் சினிமா நட்சத்திரங்கள் என்கிறபோது பெண்கள் தான் குற்றம் சாட்டப்படுகின்றனர் என்று கூறுவதற்கு சமந்தா பதிலடி கொடுப்பதாகவே இந்த பதிவு அமைந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !