டிரெடிஷன் உடையில் ஜொலிக்கும் டிடி
ADDED : 1458 days ago
விஜய் டிவி தொகுப்பாளினி திவ்யதர்ஷினி நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதில் தனக்கென தனி ஸ்டைலை வைத்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இதனாலேயே இவருக்கு ரசிகர்கள் மிக அதிகம். இன்ஸ்டாகிராமிலும் ஆக்டிவாக இருக்கும் டிடி அடிக்கடி கலகலப்பான பதிவுகளையும், போட்டோஷூட்களையும் பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் டிரெடிஷன் உடையில் தேவதை போல் ஜொலிக்கும் டிடியின் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதனை பார்த்துவிட்டு ரசிகர்கள் பலரும் 'சீக்கிரம் நல்ல செய்தி சொல்லுங்க மேடம்' என கமெண்ட் அடித்து வருகின்றனர்.