சங்க கூட்டணி உடைய காரணம் இது தானா?
ADDED : 1458 days ago
தமிழ் சினிமாவில் டிரெண்ட் செட்டராக வெற்றி பெற்ற படம் அந்த வருத்தமே இல்லாமல் சிரிக்க வைத்த சங்க படம். அந்த படம் மூலமாக தான் டிவி நடிகர் முன்னணி நடிகரானார். இந்த இயக்குனர் ஹீரோ கூட்டணி அதன் பின் உச்ச நடிகரின் பெயரில் படம் எடுத்து அதுவும் ஹிட் ஆனது. ஆனால் 3வது முறையாக இணைந்தபோது ராஜா படம் மண்ணை கவ்வியது. அதற்கு ஹீரோவின் தலையீடு அதிகமானதே காரணம் என்று இயக்குனர் நண்பர்கள் வட்டாரத்தில் புலம்பியது ஹீரோவை எட்டி இருக்கிறது. இதுதான் கூட்டணி உடைய காரணமாம்.
இனி தன்னால் சங்க ரேஞ்சுக்கு இறங்கி நடிக்க முடியாது என்பதால் தான் நடிகர் 2வது பாகம் வராது என்றார். அவருக்கு பதிலடிதரும் விதமாக இளம் நடிகரை வைத்து எடுப்பேன் என்று இயக்குனர் சபதம் எடுத்துள்ளார்.