உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கன்னட நடிகர் சத்யஜித் காலமானார்

கன்னட நடிகர் சத்யஜித் காலமானார்

கன்னட சினிமாவின் பழம்பெரும் குணசித்ர நடிகர் சத்யஜித் நேற்று காலமானார். அவருக்கு வயது 72. கடந்த 5 ஆண்டுகளாக நீரிழிவு நோயால் அவதிப்பட்டு வந்த அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். அவர் உடல்நிலை மிகவும் மோசமடையவே பெங்ளூருவில் உள்ள பௌரிங் அண்ட் லேடி கர்சண் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.

சையத் நிசாமுதின் என்னும் இயற்பெயர் கொண்ட சத்யஜித் 1983ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான 'அல்லா நீனே ஈஷ்வரா நீனே' என்ற படம் மூலம் அறிமுகமானார். ஆப்தமித்ரா, சிவா மெச்சிடா கண்ணப்பா, புத்நஞ்சா, சைத்ரதா பிரேமாஞ்சலி உள்ளிட்ட பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றார். சுமார் 650 படங்களில் நடித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !