மேலும் விமர்சனம்
இட்லி கடை
11 days ago
பல்டி
11 days ago
ரைட்
11 days ago
அந்த 7 நாட்கள்
11 days ago
சக்தித் திருமகன்
11 days ago | 1
தயாரிப்பு : ரோமியோ பிக்சர்ஸ
இயக்கம் : சதீஷ் கிருஷ்ணன்
நடிப்பு : கவின், ப்ரீத்தி அஸ்ராணி, ஆர்.ஜே.விஜய், விடிவி கணேஷ், தேவயானி, கவுசல்யா
இசை : ஜென் மார்ட்டின்
ஒளிப்பதிவு : ஹரிஷ்கண்ணன்
வெளியான தேதி : செப்டம்பர் 19, 2025
நேரம் : 2 மணிநேரம் 24 நிமிடம்
ரேட்டிங் : 3 / 5
தலைப்புக்கு ஏற்ப 'கிஸ்' சம்பந்தப்பட்ட கதை, படத்தில் 'கிஸ்' ஒரு முக்கிய கேரக்டர், 'கிஸ்' தான் கதையை நகர்த்துகிறது. 'கிஸ்'தான் ஹீரோவுக்கு பெரிய பிரச்னையை ஏற்படுத்துகிறது. 'கிஸ்' தான் காதலை பிரிக்கிறது. அதற்காக, படத்துல ஏகப்பட்ட கிஸ் சீன் இருக்கும், கிளுகிளுப்பாக இருக்கும். 'அந்த' மாதிரி படம் என்று நினைக்காதீர்கள். இது வேறு மாதிரியான 'கிஸ்' கதை.
சூப்பர் மார்க்கெட் வைத்திருக்கும் ஹீரோ கவினுக்கு ஒரு சூப்பர் பவர். யாராவது இரண்டு பேர் கிஸ் அடிப்பதை பார்த்தால், அவர் மனதில் அவர்கள் வாழ்க்கையில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பது தெரியும். ராஜாகாலத்து சம்பவம், ஒரு புத்தகம் மூலமாக அவருக்கு அந்த சக்தி கிடைக்கிறது. அந்த பவரால் காதலர்களை பிரிக்கிறார். நான் யாரையும் காதலிக்க மாட்டேன் என்கிறார். ஆனால், டான்ஸ் ஸ்கூல் நடத்தும் ஹீரோயின் ப்ரீத்திஅஸ்ராணி மீது காதல் வயப்பட, அவர்களுக்குள் 'கிஸ்' அடிக்கப்படுகிறது. சட்டென ஹீரோயின் வாழ்க்கையில் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பது கவினுக்கு தெரியவர, 'ஐய்யய்யோ அது நடக்ககூடாது' என்று பதறுகிறார். ஹீரோயினை விட்டு விலகுகிறார். அவர் கனவில் வந்து பயமுறுத்திய விஷயம் என்ன? இவர்கள் காதல் சக்சஸ் ஆனதா என்பதை பேண்டசி கலந்த காதல் கதையாக சொல்லியிருக்கிறார் தேசிய விருது பெற்ற டான்ஸ் மாஸ்டர் சதீஷ் கிருஷ்ணன். இவர் இயக்கிய முதல் படம் இது
சராசரி ஆங்கிலோ இண்டியன் குடும்பத்து இளைஞனாக வருகிறார் கவின். யாராவது கிஸ் அடிப்பதை பார்த்தால், அவர் மூளைக்குள் நரம்புகள் விரியும், அவர் மனதில் அடுத்து நடக்கும் அவர்களின் எதிர்காலம் தெரியும். பெரும்பாலும் அது காதலர்களுக்கு எதிராக இருக்க, காதலை வெறுக்கிறார். முதற்பாதியில் காதலை பிரிப்பது, ஹீரோயினை சந்திப்பது என சுமாராக நடித்து இருக்கிறார். ஆனால் காதல் பிரிவுக்குபின் கவின் நடிப்பு ஓகே. ஓவர் பில்டப், ஹீரோயிசம் இல்லாமல் இயல்பாக நடித்து இருக்கிறார். கிஸ் சம்பந்தப்பட்ட காட்சிகள் கூட டிசண்ட். குறிப்பாக, அவர் அப்பாவின் காதல் சம்பந்தப்பட்ட சீன்களில் மெர்ச்சூடு நடிப்பை தந்து இருக்கிறார். டான்ஸ் ஓகே. ஆனாலும், எதிர்பார்ப்பது நிறைய.
கவின், ப்ரீத்தி அஸ்ராணி காதல் கதை ஒரு டிராக் என்றால், அவர் அப்பா ராவ் ரமேஷ் தனது முன்னாள் காதலி கவுசல்யாவுடன் நட்பாக இருப்பது, அதனால் ஏற்படும் பிரச்னை, கவின் அம்மா தேவயானி மனநிலை ஆகியவை இன்னொரு டிராக். அது ரொம்பவே அழகாக சொல்லப்பட்டு இருக்கிறது. ஆங்கிலோ இண்டியன் லேடிகளாக கவுசல்யா, தேவயானி கண்களுக்கு அழகாக தெரிகிறார். கவின் அப்பாவாக வரும் ராவ் ரமேஷ் நடிப்பும் சூப்பர்.
சரி, கவின் காதல் கதைக்கு வருவோம். கிஸ் கனவு காரணமாக, காதலி நன்றாக இருக்க வேண்டும் என்று அவரை பிரிகிற கவின், கடைசியில் எப்படி சேருகிறார் என்பது கிளைமாக்ஸ். தீ பிடிக்க நடக்கும் அந்த கிளைமாக்ஸை இன்னும் அழுத்தமாக எடுத்து இருக்கலாம். கொஞ்சம் பீலிங் மிஸ்சிங். மற்றபடி, கவினுக்கு ஒரு ஆவரேஜ் படம். ஆனால், ஏமாற்றவில்லை.
ஹீரோயினாக வருகிற ‛அயோத்தி' பட புகழ் ப்ரீத்திஅஸ்ராணி டான்ஸ் சம்பந்தப்பட்ட காட்சிகளில் கியூட். சில காட்சிகளில் ஓரளவு நடித்து இருக்கிறார். ஹீரோ ப்ரண்ட் ஆக வருகிறார் ஆர்.ஜே.விஜய். அவர் அப்பாவாக வருகிறார் விடிவி கணேஷ் மற்றும் கவின் சம்பந்தப்பட்ட பல காமெடி சீன்கள் தான் படத்தின் ஆக்சிஜன். அதிலும், விடிவி கணேஷ் ரொம்ப நாளைக்குபின் காமெடியில் எனர்ஜியாக கலக்கி இருக்கிறார். அவர் சம்பந்தப்பட்ட அந்த கல்யாணமண்டப காட்சி, ஜிம்மில் அடிக்கும் லுாட்டி சிரிக்க வைக்கிறது. தற்கொலை மனப்பான்மையுடன் வரும் அந்த இளைஞனின் காமெடி நடிப்பு, லேடி கெட் அப் செம. கவுரவ வேடத்தில் வந்தாலும் பிரபு மனதில் நிற்கிறார். ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவு பாடல்காட்சிகளில் ஓகே, இசையமைப்பாளர் ஜென்மார்ட்டினும் அப்படியே.
முதற்பாதியில் கொஞ்சம் நெளிய வைத்தாலும், அடுத்த பாதியில் கதையை வேகமாக நகர்த்தி இருக்கிறார் இயக்குனர் சதீஷ். ராஜா சம்பந்தப்பட்ட பிளாஷ்பேக் கதையை இன்னும் எளிமையாக சொல்லியிருக்கலாம். அந்த புத்தக சம்பந்தப்பட்டவை ஓவர் பில்டப். அதேப்போல , கிஸ் சம்பந்தப்பட்ட சீன்களை இன்னும் கமர்ஷியலாக, காமெடியாக எடுத்து இருக்கலாம். முக்கியமான அந்த கிளைமாக்ஸ் காட்சியை கிராபிக்ஸ் தீ பேக்ரவுண்டில் எடுத்து இருப்பதில் அலட்சியம் தெரிகிறது. அதை இன்னும் உணர்ச்சிப்பூர்வமாக எடுத்து இருந்தாலும் கிஸ் அழுத்தமாக மனதில் பதிந்து இருக்கும். ஆனாலும், கலகல காதல் காட்சிகள், காமெடி, கிஸ் சம்பந்தப்பட்ட பேண்டசி, கதையில் சொல்லப்படும் யூத்புல் விஷயங்களுக்காக ஒருமுறை பார்க்கலாம்.
கிஸ் - ஒருமுறை அடிக்கலாம், ஸாரி, பார்க்கலாம்
11 days ago
11 days ago
11 days ago
11 days ago
11 days ago | 1