வாசகர்கள் கருத்துகள் (2)
படத்தின் வெற்றியை நம்ம பக்கம் தள்ளிவிட்டீர்கள் போல
Intha movie ya super nu solravanga idealogy layea thappu irukku
தயாரிப்பு : மைத் ரி மூவீஸ்
இயக்கம் : கீர்த்திஸ்வரன்
நடிப்பு : பிரதீப் ரங்க நாதன், மமிதா பைஜூ, சரத்குமார், ஹிர்து ஹாரூன்
இசை : சாய் அபயங்கர்
ஒளிப்பதிவு : நிகேத்பொம்மி
வெளியான தேதி : அக்டோர் 17, 2025
நேரம் : 2 மணிநேரம் 19 நிமிடம்
ரேட்டிங் : 2.75 / 5
மினிஸ்டர் சரத்குமார் மகள் மதுமிதா பைஜூ, தனது முறைப்பையன் பிரதீப் ரங்கநாதனை லவ் பண்ணுகிறார். அவரோ 'ஸாரி' எனக்கு அந்த பீலிங் வரலை என எஸ்கேப் ஆகிறார். சில மாதங்கள் கழித்து அந்த பீலிங் வர, மாமா சரத்குமாரிடம் பேசி திருமணத்துக்கு தயாராகிறார். ஆனால், மமிதாவோ, நான் இப்ப இன்னொருவரை லவ் பண்ணுறேன். நீதான் சேர்த்து வைக்கணும்னு என்று பிரதீப்பிடம் வேண்டுகோள் வைக்கிறார். இதை அறிந்த சரத்குமார், நீ அந்த லவ்வரை திருமணம் செய்தால் அவ்வளவுதான் என மிரட்டுகிறார். இதற்கிடையே மதுமிதா லவ்வரும் திருமணத்துக்கு வர, என்ன நடக்கிறது. பிரதீப், மமிதா திருமணம் அதை மீறி நடந்த நிலையில் அடுத்து என்ன என்பது கீர்த்தீஸ்வரன் இயக்கிய டியூட் கதை.
லவ்டுடே, டிராகன் படத்துக்குபின் அதே எனர்ஜியுடன் துறுதுறுவென நடித்து இருக்கிறார் பிரதீப் ரங்கநாதன். அவரின் சின்ன சின்ன எக்ஸ்பிரஸன், குறும்புகள், காமெடித்தனமான நடிப்பு கதையை அவ்வளவு எனர்ஜி ஆக வைக்கிறது. அதேசமயம் இதே நடிப்பு சில சமயம் குறிப்பாக இடைவேளைக்குபின் போரடிக்க வைக்கிறது. இப்படியெல்லாம் ஒரு காதலன், கணவன் இருப்பானா என்ற கேள்வி கதையோட்டத்தை தடுக்கிறது.
மமிதா பைஜூ வழக்கமான ஹீரோயினாக அல்லாமல் லவ், எமோஷனல் சீன்களில் நின்று விளையாடி இருக்கிறார். அவரின் டான்ஸ் மூவ்மெண்ட் செம கியூட். மமிதா லவ்வராக வரும் ஹிர்துஹாருன் அப்பாவிதனமான நடிப்பில் தனி ரூட்டில் கலக்குகிறார். பரிதாபங்கள் டிராவிட் பிரண்ட் ஆக வந்து அவ்வப்போது சிரிக்க வைக்கிறார்.
இவர்களை தவிர பால்வளத் துறை மந்திரியாக வரும் சரத்குமார் காமெடி, சீரியஸ், வில்லத்தனம் என மூன்றிலும் பின்னி எடுத்து இருக்கிறார். அவர் சொல்லும் தங்கச்சி பிளாஷ்பேக் சூப்பர். அவர் நடிப்பும் இடைவேளைக்குபின் கிரிஞ்ச் ஆகிறது. அவரை வாடா போடா என்ற ரீதியில் ஹீரோ பேசும் அந்த வசனம் ஓவர். எப்படி சம்மதித்தார் சரத்குமார்.
ஒரு பெண், இரண்டு காதலர்கள். அடுத்து ஒரு பெண், ஒரு கணவர், ஒரு காதலன், அடுத்து ஒரு பெண், ஒரு குழந்தை, அப்பா, காதலன் என்ற குழப்பான கான்செப்ட்டை எத்தனைபேர் ஏற்பார்கள் என்பது கேள்விகுறி. தாலி, காதல், பெண்கள் சென்டிமெண்ட்டை நவீனம், யூத் சப்ஜெக்ட் என்ற பெயரில் பல இடங்களில், பல டயலாக்குகளில் கொச்சைப்படுத்தி இருக்கிறார் இயக்குனர். ஒரு கட்டத்தில் நாம் என்ன சொன்னாலும், எதை செய்தாலும் ரசிகர்கள் ஏற்பார்கள் என்ற ரீதியில் இஷ்டத்துக்கு திரைக்கதை எழுதி, படத்தின் தன்மையை மாற்றி இருக்கிறார்கள்.
காதல் கதையில் புதுமை, புரட்சி என்ற பெயரில் குடும்ப வாழ்க்கை, கணவன் மனைவி உறவில் புகுந்து விளையாடி, நடைமுறைக்கு செட் ஆகாத சீன் வைத்து, இந்த இயக்குனருக்கு என்னாச்சு என பிற்பாதியில் சோதிக்க வைக்கிறார். ஹீரோவும் நாம் என்ன செய்தாலும் மக்கள் ஏற்பார்கள் என்ற மன நிலையில் நடித்து இருப்பது தெரிகிறது. இது ஆபத்தானது.
காதல் கதையில் டியூட் எக்ஸ்பரிமெண்ட் படம் அல்லது இன்றைய தலைமுறைக்கானது. அட, இப்படியெல்லாம் நடக்குமா? நடப்பது சரியா என கேள்வி எழுவது படத்தின் மைனஸ். சில இரட்டை அர்த்த டயலாக் முகம் சுளிக்க வைக்கிறது.
முதல் பாதியில் வேகமாக நடக்கும் கதை, அடுத்த பாதியில் கொஞ்சம் திணறுகிறது. இதெல்லாம் ஓவராக தெரியலையா, எப்படி வேணாலும் காதல் படம் எடுக்கலாமா என்று எழும் கேள்வியும் படத்தை பலவீனமாக்குகிறது.
மற்றபடி, இன்றைய இளம் தலைமுறைக்கு பிடித்த பல சீன், டயலாக் படம் முழுக்க இருக்கிறது. படம் முழுக்க கலர்புல் விஷயங்கள், கலகல டயலாக், காமெடி சீன் அதிகம். காதல், மேரேஜ் பங்சன் சீன்கள் படு சுவாரஸ்யம். குறிப்பாக சாய் அபயங்கர் பாடல்கள், இசை செம பிரஷ். அதை அழகாக படமாக்கி இருக்கிறார் நிகெத் பொம்மி. கிளைமாக்ஸ் ஒகே. யூத் ரசிப்பார்கள், வயதானவர்கள் விமர்சனம் செய்வார்கள். குடும்ப உறவுகள், சென்டிமெண்ட், பெண்கள் மீது நம்பிக்கை, மரியாதை கொண்டவர்கள் படத்தை திட்டுவார்கள்.
டியூட்... படம் பிடித்திருந்தால் நீங்க யூத், திட்டினால் அந்த வயதை கடந்துவிட்டீர்கள் என அர்த்தம்
படத்தின் வெற்றியை நம்ம பக்கம் தள்ளிவிட்டீர்கள் போல
Intha movie ya super nu solravanga idealogy layea thappu irukku