நகரீஸ்வரர் கோவிலில் தர்ம சாஸ்தா வீதியுலா
ADDED :2337 days ago
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், நகரீஸ்வரர் கோவிலில் உள்ள தர்ம சாஸ்தா, சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நேற்று நடைபெற்றது.
காஞ்சிபுரம் பஸ் நிலையம் அருகில, நகரீஸ்வரர் கோவில் வளாகத்தில், தர்ம சாஸ்தா கோவில் உள்ளது. இந்த கோவிலில். கார்த்திகை மாதம், அய்யப்பனுக்கு சிறப்பு பூஜை மற்றும் சுவாமி ஊர்வலம் நடைபெறும். இந்த விழா, நேற்று காலை நடந்தது. இதற்காக, பக்தர்கள் கச்சபேஸ்வரர் கோவிலில் இருந்து, பால் குடம் எடுத்து நகரீஸ்வரர் கோவிலுக்கு சென்றனர். அய்யப்பன் சிறப்பு அலங்காரத்தில் புலி மீது அமர்ந்து செல்வது போல் அலங்காரம் செய்து வீதியுலா நடைபெற்றது. பின், இரவு, 8:00 மணிக்கு, அய்யப்பன் பஜனையும், அதை தொடர்ந்து, ஜோதி தரிசனமும் நடைபெற்றது.