இவருக்கு மட்டும் இரண்டு
ADDED :2118 days ago
ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொரு திதியை விரதநாளாக பெரியவர்கள் நிர்ணயித்துள்ளனர். அது வளர்பிறையாகவோ அல்லது தேய்பிறையாகவோ இருக்கும். முருகனுக்குரியது வளர்பிறை சஷ்டி. சிவனுக்கு தேய்பிறை சதுர்த்தசியன்று மாத சிவராத்திரி விரதமிருப்பர். ராமனுக்கு வளர்பிறை நவமியில் விரதம் இருந்து ராமா யணம் படிப்பர். கிருஷ்ணருக்கு தேய்பிறை அஷ்டமி உகந்தநாள். அம்பிகைக்கு பவுர்ணமிதிதியில் விரதமிருப்பது சிறப்பு. ஆனால், விநாயகருக்கு மட்டும் வளர்பிறை, தேய்பிறை சதுர்த்தி இரண்டிலும் விரதம்இருப்பர். இரண்டிற்கும் வெவ்வேறான பலன்களும் உண்டு. வளர்பிறையில் விரதமிருந்தால் விருப்பம் நிறைவேறும். செல்வ வளம் பெருகும். தேய்பிறையில் விரதமிருக்க தடைகள் நீங்கும். முயற்சி வெற்றி பெறும்.