சென்னிமலை முருகன் கோவில் புலவருக்கு விருது
ADDED :2233 days ago
சென்னிமலை: சென்னிமலை முருகன் கோவிலில், பக்தர்களுக்கு வழிகாட்டியாக, தமிழ் புலவர் அறிவு பணியாற்றி வருகிறார். ஆன்மிகம் சம்பந்தமாக, பல்வேறு நூல்களை எழுதியுள்ளார். இவரின் தமிழ் சேவையை பாராட்டி, தமிழ்நாடு செந்தமிழ் கலை இலக்கிய சங்கம், மக்கள் சேமம் அறக்கட்டளை சார்பில் திருவள்ளுவர் விருது வழங்கப்பட்டுள்ளது. குமரி மாவட்டம், மண்டைக்காட்டில் நடந்த, தமிழ் எழுச்சி திருவிழாவில், சிவசக்தி மந்திர வித்யாபீடத்தின் மடாதிபதி ஜீனுராமசர்மா இந்த விருதை வழங்கினார்.