உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காலபைரவர் கோவிலில் பைரவர் ஜெயந்தி

காலபைரவர் கோவிலில் பைரவர் ஜெயந்தி

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த கல்லுகுறிக்கி பெரிய ஏரி மேற்கு கோடியில் உள்ள காலபைரவர் கோவிலில், 809ம் ஆண்டு பைரவர் ஜெயந்தி விழா நேற்று நடந்தது.


இதையொட்டி, காலை கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், காலபைரவ மஹா ஹோமம், காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம் ஆகியவை நடந்தன. விழாவில், 500க்கும் மேற்பட்ட பெண்கள், வெள்ளை பூசணியில் விளக்கேற்றி காலபைரவரை வழிபட்டனர். 12:00 மணிக்கு, காலபைரவர் சுவாமி உற்சவம் நடந்தது. விழாவிற்கு, கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டுமின்றி, பெங்களூரு, மற்றும் குப்பத்திலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். இவர்களின் வசதிக்காக கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்ட், பழைய பஸ் ஸ்டாண்ட் மற்றும் ரவுண்டானாவில் இருந்து, கோவில் நிர்வாகத்தின் சார்பில், இலவசமாக மினி பஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கான ஏற்பாடுகளை, அறக்கட்டளை நிர்வாகிகளுடன், காலபைரவரை குலதெய்வமாக வழிபடும், 165 கிராமத்தினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !