பெரியநாயக்கன்பாளையம் அருகே வீரமாத்தி கோவிலில் நீராட்டு விழா
ADDED :2124 days ago
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே சின்னமத்தம்பாளையம் ஆலுார் தேசி லிங்கேஸ்வரர், வீரமாத்தியம்மன் கோவிலில் எட்டாம் ஆண்டு திருக்குட நீராட்டு திருக்கார்த் திகை விழா நடந்தது.
இங்கு நுாறு ஆண்டு பழமை வாய்ந்த வீரமாஸ்தியம்மன் உடனமர் ஆலுார் தேசிலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது.
விழாவையொட்டி, பெரிய திருமஞ்சனம், கங்கை நீரால் அபிஷேகம், தீர்த்தம் அழைத்து வருதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. மறுநாள் காலை, மங்கல இசையுடன் திருப்பள்ளி எழுச்சி, திருக்குடங்கள் திருவீதியுலா வருதல் நடந்தன. விழாவையொட்டி, புலவர் அரங்கப்பன் பக்தி சொற்பொழிவாற்றினார்.
செல்வவிநாயகர் நாமசங்கீர்த்தன குழுவின், நாம சங்கீர்த்தன பஜனை நடந்தது. மதியம் உச்சிகால பூஜையும், மாலை பிரதோஷ வழிபாடும், திருக்கல்யாணமும் நடந்தது. நிகழ்ச்சி க்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.