சதுரகிரியில் பக்தர்களை அனுமதிப்பதில் தாமதம்
ADDED :2199 days ago
வத்திராயிருப்பு: மார்கழி பிறப்பை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு வனத்துறை அனுமதியளித்தது. நேற்று முன்தினம் 800 பக்தர்கள் மலையேறி இரவில் தங்கி மார்கழி மாத பிறப்பு வழிபாட்டில் பங்கேற்றனர். நேற்று அதிகாலை முதல் பக்தர்கள் தாணிப்பாறையில் குவிந்தனர்.சாரல் மழையால் அனுமதிக்க வனத்துறை அனுமதி மறுத்தது. மழை குறைந்த பின் காலை 9:15 மணிக்குமேல் அனுமதிக்கபட்டனர். பகல் 11:30 மணிக்குமேல் பக்தர்கள் செல்வது நிறுத்தபட்டது. மலையேறிய பக்தர்கள் சுந்தரமகாலிங்கம், சந்தனமகாலிங்கம் கோயிலில் தரிசனம் செய்து திரும்பினர்.