உலகிலேயே உயரமான சிவலிங்கம்
ADDED :2157 days ago
உலகின் மிக உயரமான 111 அடி சிவலிங்கம் கன்னியாகுமரி மாவட்டத்தில் சமீபத்தில் மக்கள் பார்வைக்காகத் திறந்து வைக்கப்பட்டது. கர்நாடக மாநிலம், கோலார் அருகே கம்மசந்த்ரா கோடி லிங்கேஸ்வரர் கோயிலில் அமைந்துள்ள 108 அடி உயர சிவலிங்க மே உலகின் மிக உயரமான சிவ லிங்கம் என்ற பெருமையைப் பெற்றிருந்தது. இந் நிலையில், கன்னியாகுமாரி மாவட்ட, கேரள எல்லைப் பகுதியான உதயம் செங்கல் மகேஸ்வர சிவ-பார்வதி கோயிலில் அமைக்கப்பட்டுள்ள சிவலிங்கம் அந்தப் பெரு மையை பெறுகிறது.
சிவலிங்கத்தின் உட்பகுதி எட்டு மாடிகளைக் கொண்டு குகை வடிவில் அமைக்கப் பட்டுள்ளது. இதன் வாசல் வழியாக பக்தர்கள் சென்று தரிசிக்கலாம். உட்பகுதி நடைபாதை ஓரங்களில் சித்தர்கள், சிவனடியார்களின் சிற்பங்கள் அமைக்கப் பட்டுள்ளன. மேலும், 108 சிவலிங்கங்களும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.