தட்சிண அயோத்தி
ADDED :2157 days ago
"பாஸ்கர க்ஷேத்ரம் என்றழைக்கப்படும் வடுவூருக்கு, "தட்சிண அயோத்தி என்ற பெயரும் உண்டு. இத்தலத்தில் சக்கரவர்த்தித் திருமகன் கோதண்டராமராக சீதா, லக்ஷ்மணர், அனுமன் சமேதராக கிழக்கே நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கிறார். மிகவும் வரப்ரஸாதியான கோதண்ட ராமரது திருவுருவம் மிகவும் அழகு வாய்ந்தது. வடுவூர் வேதபாடசாலை மிகவும் பிரசித்தி பெற்றது. கண்வ மகரிஷி, குலசேகர ஆழ்வார் இருவருக்கும் ராமர் இங்கு காட்சி தந்துள்ளார்.