ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி: முத்துசாய கொண்டை அலங்காரத்தில் நம்பெருமாள்
ADDED :2463 days ago
ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் கோயில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா பகல் பத்து 9ம் நாளான இன்று முத்துசாய கொண்டை, முத்து அபயஹஸ்தம், முத்துச்சரம், முத்துக்குறி அலங்காரத்தில் நம்பெருமாள் பக்தர்களுக்கு சேவை சாதித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
கோவிலில் மார்கழி மாத பாவை நோன்பு 19ம் நாளான இன்று பரமபத நாதர் சன்னதியில் உள்ள கண்ணாடி அறையில் குத்து விளக்கெரிய என்று தொடங்கும் திருப்பாவையின் 19ம் பாசுரத்திற்கு ஏற்ப கோபிகைகள் நப்பின்னை மற்றும் கண்ணனை எழுப்புதல் காட்சி அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. பக்தர்கள் தரிசனம் செய்தனர்.