உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீரங்கம் ராப்பத்து உற்சவம்: பரமபத வாசலில் நம்பெருமாள் தரிசனம்

ஸ்ரீரங்கம் ராப்பத்து உற்சவம்: பரமபத வாசலில் நம்பெருமாள் தரிசனம்

ஸ்ரீரங்கம் : ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், வைகுண்ட ஏகாதசி விழா ராப்பத்து உற்சவத்தின் 3ம் நாள் பவள மாலை, முத்தாரம், ரத்தின அபேஸம் அணிந்து நம்பெருமாள் பரமபத வாசலை கடந்து சென்றார்.

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், வைகுண்ட ஏகாதசி விழா ராப்பத்து உற்சவம் நடைபெற்று வருகிறது. விழாவில் 3ம் நாள் பவள மாலை, முத்தாரம், ரத்தின அபேஸம் அணிந்து நம்பெருமாள் பரமபத வாசலை கடந்து சென்றார். பின் இரண்டாம் பிரகாரம் வழியாக  ஆயிரங்கால் மண்டபத்துக்கு  எழுந்தருளி நம்பெருமாள் காட்சியளித்தார்.  நீண்ட வரிசையில் ஏராளமான பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்தனர்.  பக்தர்களுக்கு, கோவில் நிர்வாகம் சார்பில் குடிநீர் ஆங்காங்கே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !