கயத்தாறு காந்தாரி அம்மன் கோயில் கொடை விழா
ADDED :5011 days ago
கயத்தாறு: கயத்தாறு காந்தாரி அம்மன் கோயில் கொடை விழா நடந்தது. கயத்தாறு காந்தாரி அம்மன் கோயில் கொடை விழா கால்நட்டு நிகழ்ச்சியுடன் துவங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம் செய்யப்பட்டது. கடந்த 24ம் தேதி கோயில் கொடை விழா நடந்தது. காலையில் பால் குடம் எடுத்தல், முளைப்பாரி ஊர்வலம், தொடர்ந்து அம்மனுக்கு பாலபிஷேகம் நடந்தது. மதியம் கொடை விழா நடந்தது. பெண்கள் மாவிளக்கு எடுத்து வழிபட்டனர். இரவில் பெண்கள் பொங்கலிட்டு படையல் செய்தனர். நேற்று முளைப்பாரி எடுத்தவர்கள் முளைப்பாரியை ஆற்றில் கரைக்கும் நிகழ்ச்சியும், இரவில் புனிதநீர் கும்பத்தில் எடுத்துவரப்பட்டு ஊர்பவனியும் நடந்தது. கயத்தாறு மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் ஏராளமானோர் கொடைவிழாவில் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாக கமிட்டியினர் செய்திருந்தனர்.