தென்பெண்ணை ஆற்றில் நாளை அருணாசலேஸ்வரர் தீர்த்தவாரி
ADDED :2084 days ago
திருவண்ணாமலை: கள்ளக்குறிச்சி மாவட்டம், மணலுார் பேட்டை தென்பெண்ணை ஆற்றில் நாளை, அருணாசலேஸ்வரர் தீர்த்தவாரி நடக்கிறது. திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் ஆண்டுக்கு மூன்று முறை, வெளியில் சென்று தீர்த்தவாரி நிகழ்வு நடக்கும். இதில், ரத சப்தமி நாளில், கலசப்பாக்கம் செய்யாற்றிலும், மாசி மகத்தன்று, பள்ளிக்கொண்டாப்பட்டு துரிஞ்சலாற்றிலும், தை, 5ல் மணலுார் பேட்டை, தென்பெண்ணை ஆற்றிலும், அருணாசலேஸ்வரர் பங்கேற்கும் தீர்த்தவாரி நடக்கும். அதன்படி நாளை(19), தென்பெண்ணை ஆற்றில் தீர்த்தவாரி நடக்க உள்ளது. இதில் பங்கேற்க நாளை, கோவிலில் இருந்து அருணாசலேஸ்வரர் புறப்பட்டு செல்வார்.