உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புண்ணியம் உங்களுக்கே!

புண்ணியம் உங்களுக்கே!

மனிதனாக பிறந்தவன் ஐந்து உயர்ந்த செயல்களைச் செய்ய வேண்டும். அவை,
1. வேதத்தைக் கற்கவும், மற்றவருக்கும் கற்பிக்கவும் வேண்டும். இதை ‘பிரம்ம யக்ஞம்’ என்பர்.
2. எள் மற்றும் நீரால் முன்னோருக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும். வெள்ளை அன்னம் படைத்து வணங்க வேண்டும். இதற்கு ‘பித்ரு யக்ஞம்’ என்று பெயர்.
3. பிராணிகளுக்கு உணவளிக்க வேண்டும். இதை ‘பூத யக்ஞம்’ என்பர்
4. எதிர்பாராமல் வீட்டிற்கு வரும் விருந்தினரை மனம் குளிர உபசரிக்க வேண்டும். இதை, ‘நர யக்ஞம்’ என்பர்.
5. தெய்வங்களுக்கும், தேவர்களுக்கும் யாகம் செய்ய வேண்டும். இதை ‘தேவ யக்ஞம்’ என்பர்.
வேதங்களில் இந்த பஞ்சமகா யக்ஞம் பற்றியும் கூறப்பட்டுள்ளது. இதில் தெய்வ யக்ஞத்திற்கே அதிக செலவாகும். மற்றவை குறைந்த செலவுடையவை. முடிந்ததை செய்தால் உங்களுக்கே புண்ணியம் சேரும்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !