ஞான சபை நாயகன்
ADDED :2405 days ago
சிவபெருமான் வைரவ மூர்த்தியாக எழுந்தருளியுள்ள திருப்புத்தூரிலுள்ள சபையை சப்த தாண்டவ சபைகளில் ஒன்றாகக் கொண்டுள்ளனர். திருப்புத்தூர் புராணம் இந்தச் சபையை கவுரி தாண்டவ சபை எனச் சிறப்பிக்கிறது. அதேபோல், வழுவூர் வீரட்டகாசர் கோயில் பெரிய சபையில் கஜசம்ஹாரராக அருள்கிறார், ஈசன்!