திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ரத சப்தமி விழா
ADDED :2381 days ago
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ரத சப்தமி விழாவை முன்னிட்டு ஒரு நாள் பிரம்மோற்சவம் நடந்து வருகிறது. கோயில் மாட வீதிகளில் சூரிய பிரபை வாகனத்தில் உலா வரும் மலையப்பசுவாமியை பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். ரத சப்தம விழா முன்னிட்டு ஒரே நாளில் 7 வாகனங்களில் மலையப்பசுவாமி பக்தர்களுக்கு தரிசனம் அளிக்கிறார்.