பழநி முருகன் கோவில் தைப்பூச விழா துவக்கம்
ADDED :2129 days ago
பழநி :பழநி முருகன் கோவில் தைப்பூசத் திருவிழா, இன்று கொடியேற்றத்துடன் துவங்கி, வரும், 24 வரை நடக்கிறது. 8ல் தேரோட்டம் நடக்கிறது. இன்று காலை, 9:30 மணிக்கு, பழநி பெரியநாயகியம்மன் கோவிலில், கொடியேற்றத்துடன் விழா துவங்குகிறது. மலைக் கோவிலில், உச்சிகாலத்தில் காப்பு கட்டுதல் நடக்கிறது. 10 நாட்கள் நடக்கும் விழாவில், தினமும் ஏராளமான பக்தர்கள், பாதயாத்திரையாக வந்து காவடி எடுத்தும், அலகு குத்தியும் நேர்த்திக் கடன் செலுத்துவர்.முக்கிய நிகழ்ச்சியாக, 7ம் தேதி இரவு, 7:30 முதல், 8:30 மணிக்குள் திருக்கல்யாணமும், 8ல் பெரியநாயகியம்மன் கோவிலில், மாலை, 4:30 மணி முதல் தைப்பூச தேரோட்டமும் நடக்கிறது.