விளக்கேற்றும் விதிமுறைகளும் அதனால் கிடைக்கும் பலன்களும்!
விளக்கேற்றும் விதிமுறைகளும், அதனால் கிடைக்கும் பலன்களும் பார்ப்போமா!
எண்ணெய்
நெய் – லட்சுமி கடாட்சம்
நல்லெண்ணெய் – பீடைகள் விலகும்
ஆமணக்கு எண்ணெய் – குடும்ப வளர்ச்சி
கடவுளுக்கு உகந்த எண்ணெய்
விநாயகர் – தேங்காய் எண்ணெய்
லட்சுமி – நெய்
பெருமாள், பைரவர் – நல்லெண்ணெய்
சிவன் – இலுப்பை எண்ணெய்
அம்பிகை – கூட்டு எண்ணெய் (நெய், விளக்கெண்ணெய், வேப்ப எண்ணெய்)
திரிகளும் பயன்களும்
பஞ்சுத்திரி – நன்மை தரும்
தாமரைத் தண்டு – முன்வினைப்பாவம் தீரும்
வாழைத்தண்டு – குழந்தைப்பேறு
வெள்ளெருக்கு – பெருஞ்செல்வம் தரும்
மஞ்சள் சேலைத்திரி– அம்மன் அருள்
சிவப்பு சேலைத்திரி – திருமணத்தடை நீங்கும்
வெள்ளை துணித்திரி – விருப்பம் நிறைவேறும்
விளக்கேற்றும் திசைகள்
கிழக்கு – துன்பம் அகலும்
மேற்கு – கடன் தொல்லை, பங்காளிப்பகை தீரும்
வடக்கு – திருமணத்தடை, கல்வித்தடை நீங்கும்
தெற்கு – விளக்கேற்றக் கூடாது
முகங்களின் பலன்கள்
ஒருமுகம் – மத்திம பலன்
இரு முகம் – குடும்ப ஒற்றுமை
மூன்று முகம் – புத்திர சுகம்
நான்கு முகம் – பசு, பூமி, பால்பாக்கியம்
ஐந்துமுகம் – சகல சவுபாக்கியம்
திருவிளக்கு பாடல்
தீபமங்கள ஜோதி நமோ நம
துாய அம்பல லீலா நமோ நம
தேவ குஞ்சரி பாகா நமோ நம
அருள் தாராய் என நாளும் உன் புகழே பாடி
நான் இனி அன்புடன் ஆச்சார பூஜை
செய்து உய்ந்திட வீணாள் படாதருள் புரிவாயே!
விளக்கு ஏற்றும் போது இதைப் பாட லட்சுமி கடாட்சம் பெருகும்.