பழநி மாரியம்மன் கோயில் மாசி விழா முகூர்த்தக்கால்
ADDED :2058 days ago
பழநி, பழநி முருகன் கோயிலின் உபகோயிலான மாரியம்மன் கோயில் மாசித்திருவிழா துவக்க நிகழ்வாக நேற்றிரவு முகூர்த்தக்கால் நடப்பட்டது. பிப்.,25ல் திருக்கம்பம் சாட்டுதல் நடைபெறும். மார்ச்.,3ல் இரவு கொடியேற்றமும், பூவோடு வைத்தலும் நடக்கும். மார்ச்.,4ல் அடிவாரம் குமாரசமுத்திரம் அழகுநாச்சியம்மன் கோயில்களில் திருக்கல்யாணமும், மார்ச்.,10ல் மாரியம்மன்கோயிலில் திருக்கல்யாணமும் நடக்கும். மார்ச்.,11ல் திருத்தேரோட்டம் நடக்கும். பெரியநாயகியம்மன் கோயில் வளாகத்தில் பக்திசொற்பொழிவு உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெறும். ஏற்பாடுகளை இணைஆணையர் ஜெயசந்தரபானு ரெட்டி, துணை ஆணையர் செந்தில் குமார் செய்கின்றனர்.