கொடைக்கானல் மலைப்பகுதியில் சிவராத்திரி விழா
ADDED :2058 days ago
கொடைக்கானல்: கொடைக்கானல் ,தாண்டிக்குடி மலைப்பகுதியில் மகா சிவராத்திரி விழா சிறப்பாக நடந்தது. கொடைக்கானல் சங்கரலிங்கேஸ்வரர் கோயிலில் அபிஷேக , ஆராதனை மற்றும் பஜன் நடந்தன. தாண்டிக்குடி ஜலகண்ட அருணாச்சலேஸ்வரர் கோயில், கொடைக்கானல் ஆனந்தகிரி பெரிய மாரியம்மன் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த அம்மனை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மேலும் மலைப்பகுதியில் குல தெய்வ வழிபாடுகளும், காமாட்சி அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன. பண்ணைக்காடு மயான காளி அம்மன் கோவிலில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.