ஸ்வர்ண விநாயகர் கோயிலில் கும்பாபிஷேக விழா
ADDED :2092 days ago
சத்திரப்பட்டி : சத்திரப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் அமைந்துள்ள ஸ்வர்ண விநாயகர் கோயிலில் கும்பாபிஷேக விழா நடந்தது. முதல் நாளில் யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டது. விரதமிருந்த பக்தர்கள் பால்குடம் எடுத்தனர். குத்து விளக்கு பூஜையும் நடந்தது. கும்பாபிஷேகத்தை துாத்துக்குடியை சேர்ந்த விநாய குருக்கள் நடத்தி வைத்தார். ஏற்பாடுகளை சத்திரப்பட்டி ராயல் சர்ஜிகல்ஸ் ஆறுமுகம் செய்திருந்தார். அன்னதானம் வழங்கப்பட்டது.