பிரசாதம் இது பிரமாதம்
ADDED :2207 days ago
அடை:
தேவையான பொருட்கள்
அரிசி – 100 கி
துவரம் பருப்பு – 100 கி
வத்தல் – 7
சீரகம் – 1 ஸ்பூன்
சோம்பு – 1 ஸ்பூன்
உப்பு – 1 ஸ்பூன்
பெருங்காயம் – சிறிதளவு
கறிவேப்பிலை – 1 இணுக்கு
தேங்காய் துருவல் – 3 ஸ்பூன்
எண்ணெய் – 50 மி.லி.
செய்முறை:
அரிசி, பருப்பை தனித்தனியே 2 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும், சீரகம், சோம்பு, உப்பு, வத்தல், பெருங்காயத்துடன் அரிசியை அரைக்கவும். நைசாக அரைப்பட்டதும், பருப்பை சேர்த்து சற்று கரகரப்பாக அரைக்கவும். பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, தேங்காய்த் துருவலை மாவுடன் சேர்த்து கலக்கவும். தோசைக்கல்லில் ஊற்றி எண்ணெய் விட்டு இருபுறமும் வேக வைக்கவும். பொன்னிறமாக வெந்ததும் சூடான அடை தயார்.