ஊரடங்கு உத்தரவு ராமகிருஷ்ண மிஷன் உதவி
ADDED :2044 days ago
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன் பாளையத்தில் உள்ள ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயத்தின் சார்பில், பாலமலையில் உள்ள ஆதிவாசி மக்களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவு பொருட்களை வித்யாலய செயலாளர் சுவாமி கரிஷ்ட்டானந்தர் வழங்கினார்.
ஊரடங்கு உத்தரவால், பெரியநாயக்கன்பாளையம், கூடலூர் கவுண்டம்பாளையம், ஜோதிபுரம், நாய்க்கன்பாளையம், கோவனூர் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும், 350க்கும் மேற்பட்ட ஏழை, எளிய குடும்பத்தினர் உணவின்றி அவதிப்பட்டனர். இவர்களுக்கு ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயத்தின் சார்பில் உதவிகள் வழங்கப்பட்டன. மேலும், பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் உணவின்றி தவிக்கும் ஏழை, எளிய மக்களுக்கு தொடர்ந்து உணவு வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என, ராமகிருஷ்ண மிஷன் வித்யாலய செயலாளர் சுவாமி கரிஷ்டானந்தர் தெரிவித்தார்.