உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் காமாட்சிபுரி ஆதீனம் வினியோகம்

பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் காமாட்சிபுரி ஆதீனம் வினியோகம்

பல்லடம்: பல்லடம் வட்டாரத்தில், கபசுர மூலிகை கஷாய குடிநீர் வழங்கும் பணியில், கோவை காமாட்சிபுரி ஆதினம் ஈடுபட்டார்.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக, கபசுர மூலிகை கஷாய குடிநீரை பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். 17 வகையான மூலிகைகள் அடங்கியகபசுர குடிநீர், நோய் தடுப்பு மருந்தாக, சித்த மருத்துவத்தால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தன்னார்வலர்கள் பலரும், பொதுமக்களுக்கு அவற்றை இலவசமாக வழங்கி வருகின்றனர். பல்லடத்தை அடுத்த சித்தம்பலம் நவகிரக கோட்டையின் சார்பில், பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. பல்லடம் வட்டார கிராமங்களுக்கு நேரடியாக சென்று, கிராம மக்களுக்கு நோய் தடுப்பு நடவடிக்கை குறித்து அறிவுறுத்தி, கபசுர குடிநீரை இலவசமாக வழங்கி வருகின்றனர். நேற்று முன்தினம், பல்லடம் வந்த கோவை காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள், பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கினார். தொடர்ந்து, பல்வேறு கிராமங்களுக்கும் சென்று, மக்களை சந்தித்து, கசாயத்துடன் அறிவுரைகளையும் வழங்கி வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !