மாரியம்மன் கோவிலில் திருப்பணி
ADDED :1982 days ago
கள்ளக்குறிச்சி : நீலமங்கலம் சக்தி மாரியம்மன் கோவில் ராஜகோபுர திருப்பணி நேற்று துவங்கியது. கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலம் சக்தி மாரியம்மன் கோவிலில் கும்பாபிேஷகம் நடத்த கிராம மக்கள் முடிவு செய்தனர். அதனைத் தொடர்ந்து, கல் மண்டபம், கோபுரம் அமைக்கும் பணி துவங்கி, 45 அடி உயரத்தில் மூன்று நிலைகள் கொண்ட ராஜகோபுரத்திற்கான திருப்பணிகள் நேற்று துவங்கியது. இதனையொட்டி விக்னேஸ்வர பூஜை, நவக்கிரக பூஜை நடத்தப்பட்டது. ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.