பத்மநாபசுவாமி கோவிலில் பக்தர்களுக்கு அனுமதியில்லை
ADDED :1942 days ago
கேரளா: கேரளாவில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டன. நாடு முழுவதும் வழிபாட்டு தலங்கள், ஷாப்பிங் மால்கள், ஹோட்டல்கள் திறக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதனையடுத்து, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வழிபாட்டுத் தலங்கள் மற்றும் உணவு விடுதிகள் திறக்கப்பட்டு வருகின்றன. இதனிடையே, திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலில் வரும் 30ம் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.