உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருநெல்வேலி நெல்லையப்பர் ஆனித் திருவிழா: பக்தர்கள் கோரிக்கை

திருநெல்வேலி நெல்லையப்பர் ஆனித் திருவிழா: பக்தர்கள் கோரிக்கை

திருநெல்வேலி: திருநெல்வேலி, நெல்லையப்பர் கோவிலில் ஆனி திருவிழாவை நடத்த வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

திருநெல்வேலி , நெல்லையப்பர் - காந்திமதி அம்பாள் கோவிலில் ஆண்டுதோறும் ஆனி திருவிழா, தேரோட்டம் சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு கொரோனா தடுப்பு ஊரடங்கு காரணமாக கோவில்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. நாடு முழுவதும் கோயில்கள் திறக்கப்பட்டாலும் தமிழகத்தில் கோயில்கள் திறக்க தடை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நெல்லையப்பர் கோவிலில் பக்தர்களை அனுமதிக்காமல் கோவிலுக்குள் ஆனி திருவிழாவை நடத்த வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !