மணக்குள விநாயகர் யானை லட்சுமியை கோவிலுக்கு கொண்டு வர கோரிக்கை
ADDED :1966 days ago
புதுச்சேரி : யானை லட்சுமியை மணக்குள விநாயகர் கோவில் வளாகத்திற்கு மீண்டும் கொண்டு வர வேண்டும் என இந்து மக்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
புதுச்சேரி இந்து மக்கள் கட்சியின் ஆலோசனை கூட்டம் நடந்தது. மாநில தலைவர் மஞ்சினி தலைமை தாங்கினார். மாநில செயலர் ராஜா, பொருளாளர் சங்கரன், அமைப்பு குழு தலைவர் ஜம்புலிங்கம், காமராஜ் நகர் தொகுதி அமைப்பாளர் சம்பந்தம், துணை தலைவர் கருணாநிதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில், கொரோனா பரவலை கட்டுப்படுத்திட கிராமங்கள் தோறும் மருத்துவக்குழுவை அனுப்பி பரிசோதனை செய்து, கபசுர குடிநீர், நோய் எதிர்ப்பு மருந்துகள் வழங்கவேண்டும். காமராஜர் வேளாண் பண்ணையில் விடப்பட்டுள்ள மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமியை மீண்டும் கோவிலுக்கு கொண்டுவர அரசு உத்தரவிட வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.