ஏர்வாடி தர்காவில் சந்தனம் பூசும் நிகழ்ச்சி
ADDED :1958 days ago
கீழக்கரை: ஏர்வாடியில் சுல்தான் செய்யது இப்ராகீம் பாதுஷா நாயகம் தர்கா உள்ளது. இங்கு ஜூலை மாதம் சந்தனக்கூடு விழா நடக்கும். ஊரடங்கால் ஜூலை, 2 முதல் 23 நாட்களுக்கு மாலையில் உலக நன்மைக்கான சிறப்பு துஆவும், மவுலீது ஓதப்பட்டு வருகிறது. ஜூலை, 15 ம் தேதி அதிகாலை தர்காவில் உள்ள மக்பராவில் புனித சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடக்கிறது. பொதுமக்கள் யாருக்கும் அனுமதி கிடையாது என, தர்கா ஹக்தார் நிர்வாக சபையினர் தெரிவித்துள்ளனர்.