அம்மனுக்கு ஸ்ரீவித்யாபூஜை
ADDED :2204 days ago
சக்தி பீடங்களில் ஒன்றான திருச்சி மாவட்டம் திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயிலில் அகிலாண்டேஸ்வரி அருள்பாலிக்கிறாள். இங்கு ஆடிவெள்ளியில் ஸ்ரீவித்யா பூஜை வைதீக முறைப்படி நடத்துகின்றனர். இந்த அம்மனின் காதுகளில் உள்ள தாடங்கங்களில் (தோடு) ஸ்ரீசக்கரத்தை ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்துள்ளார். ஆடி வெள்ளியன்று இந்த அம்மன் மாணவியாக இருக்க சிவபெருமானே குருநாதராக இருந்து உபதேசிக்கிறார். இந்த அம்மனை மாணவர்கள் வழிபட்டால் கல்வி வளர்ச்சி உண்டாகும்.