உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுகவனேஸ்வரர் கோவில் வைகாசி விசாக விழா மே 25ல் துவக்கம்!

சுகவனேஸ்வரர் கோவில் வைகாசி விசாக விழா மே 25ல் துவக்கம்!

சேலம்:சேலம் சுகவனேஸ்வரர் கோவில் வைகாசி விசாகப் பெருவிழா, மே 25ல் துவங்கி ஜூன் 4 வரை நடக்கிறது.சேலத்தில் பிரசித்தி பெற்ற சுகவனேஸ்வரர் கோவிலின் வைகாசி விசாகப் பெருவிழா மே 25ல் துவங்குகிறது. ராஜகணபதி கோவிலில் ரதவிநாயகர் பூஜையுடன் விழா நிகழ்ச்சிகள் துவங்குகிறது. 26ம் தேதி காலையில் விக்னேஸ்வர பூஜை, துவஜாரோகணத்தை தொடர்ந்து, ஸ்வாமி அம்மன் புறப்பாடு ஆகியன நடக்கிறது.மே 27ம் தேதி காலையில் பல்லக்கில் ஸ்வாமி புறப்பாடு, மண்டப பூஜை நடக்கிறது. இரவில் சிம்ம வாகனத்தில் ஸ்வாமி புறப்பாடும், 28ம் தேதி காலையில் பல்லக்கில் ஸ்வாமி அம்மன் புறப்பாடும், மண்டப பூஜை நடக்கிறது. இரவில் இருதலைப்பட்சி வாகனத்தில் ஸ்வாமி புறப்பாடு நடக்கிறது. 29ம் தேதி இரவில் நாக வாகனத்தில் ஸ்வாமி புறப்பாடும், 30ம் தேதி மாலையில் திருக்கல்யாணம் பஞ்ச மூர்த்திகள் திருக்காட்சி, வெள்ளி ரிஷப வாகன காட்சியும், 31ல் யானை வாகனத்தில் ஸ்வாமி புறப்பாடும் நடக்கிறது. ஜூன் 1ம் தேதி இரவில் கைலாச வாகனத்திலும், 2ம் தேதி குதிரை வாகனத்திலும், 3ம் தேதி காலையில் ஸ்வாமி ரதத்துக்கு எழுந்தருளை தொடர்ந்து தேரோட்டம் நடக்கிறது. 4ம் தேதி வண்டிக்கால் உற்சவம், சத்தாபரணம், வசந்த உற்சவம் ஆகியன நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் உதவி கமிஷ்னர் பாஸ்கரன், கட்டளைதாரர்கள், ஊழியர்கள் செய்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !