ஆடிப்பெருக்கு விழா அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை
ADDED :1973 days ago
பெ.நா.பாளையம்: ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு துடியலூர் நரசிம்மநாயக்கன்பாளையம் பெரியநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. பேரூர், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட நதிக்கரை ஓரங்களில் முன்னோர் வழிபாடு நடத்த அரசு தடை விதித்ததால், பெரும்பாலானவர்கள் வீட்டிலேயே படையலிட்டு, முன்னோர் வழிபாட்டை நடத்தினர். கோயில்களில் நடந்த விழாவில், ஒரு சில இடங்களில் சமூக இடைவெளியுடன், முக கவசம் அணிந்து, பக்தர்கள் அம்மனை வழிபட்டனர்.