சாலையோரங்களில் விநாயகர் சிலை விற்பனை
ADDED :1881 days ago
வடவள்ளி: மருதமலை ரோட்டில், விநாயகர் சதுர்த்தியை ஒட்டி, விநாயகர் சிலைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் வரும், 22ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. பொதுமக்களும் தங்கள் வீடுகளில் சதுர்த்தி விழாவை கொண்டாட தயாராகி வருகின்றனர். இதற்காக பல வண்ணங்களில், கற்பக விநாயகர், சக்தி விநாயகர் என, பல விதங்களில், அங்காங்கே விநாயகர் சிலைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வடவள்ளியில், சாலையோரங்களில் விநாயகர் சிலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இங்கு அரை அடி முதல் 3 அடி வரை உள்ள விநாயகர் சிலைகள் விற்பனை செய்யப்படுகின்றன. விநாயகர் சிலைகள், 150 முதல் 850 ரூபாய் வரை விற்கப்படுகின்றன. பொதுமக்களும், ஆர்வத்துடன் வந்து விநாயகர் சிலைகளை வாங்கி செல்கின்றனர்.