உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாசரேத் அருகே பிள்ளையன்மனை ஆலயத்தில் இன்று அசனப்பண்டிகை!

நாசரேத் அருகே பிள்ளையன்மனை ஆலயத்தில் இன்று அசனப்பண்டிகை!

நாசரேத் : நாசரேத் அருகே பிள்ளையன்மனை சேகரம் தூய பரமேறுதலின் ஆலய பிரதிஷ்டை மற்றும் அசனப்பண்டிகை இன்று நடக்கிறது. தூத்துக்குடி-நாசரேத் திருமண்டலத்தை சேர்ந்த பிள்ளையன்மனை தூய பரமேறுதலின் ஆலய பிரதிஷ்டை மற்றும் அசன பண்டிகையை முன்னிட்டு நற்செய்தி கூட்டங்கள் நடந்தது. நேற்று பண்டிகை ஆயத்த ஆராதனை, திருவிருந்து ஆராதனை நடந்தது. இதில் திருமண்டல பொருளாளர் குருவானவர் சாமுவேல் செல்வராஜ் அருட்செய்தி அளித்தார். இன்று அதிகாலை நடக்கும் பண்டிகை ஆராதனையில் குருவானவர் சாமுவேல் பால்ராஜ் செய்தி அளிக்கிறார். மாலை 4.30 மணிக்கு அசன விருந்து நடக்கிறது. நாளை காலை 10 மணிக்கு ஆண்கள் ஐக்கிய சங்க பண்டிகை திருவிருந்து ஆராதனை நடக்கிறது. இரவு 7.30 மணிக்கு மின்னொளி ஐவர் கால்பந்தாட்டபோட்டி நடக்கிறது. நாளை மறுநாள் வாலிப பெண்கள் ஐக்கிய சங்க பண்டிகை நடக்கிறது. காலை 10 மணிக்கு திருவிருந்து ஆராதனை நடக்கிறது. வரும் 20ம் தேதி வாலிப ஆண்கள் ஐக்கிய சங்க பண்டிகை நடக்கிறது. காலை 11 மணிக்கு வருடாந்திர பொது க்கூட்டம் நடக்கிறது. ஏற்பாடுகளை சேகர குரு கிங்ஸ்லி டேனியல், சபை ஊழியர் டென்சிங், அசன கமிட்டியினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !